பக்கத்து வீட்டுக்காரரின் 4 வயது குழந்தையை கொலை செய்து வீட்டில் மறைத்து வைத்த 39வயது பெண்

மும்பை அந்தேரி பகுதியில் சந்தோஷி மாதா நகரில் வசிப்பவர் Madhu Gadhe 39 வயது. இவர் பக்கத்து வீட்டுக்காரரின் 4 வயது குழந்தையை வீட்டில் அடைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
39 வயதான Madhu Gadhe அக்கம்பக்கத்தினர் உடன் அடிக்கடி சின்ன சின்ன விஷயங்களுக்கு சண்டை போட்டுள்ளார். இதற்கு பழி வாங்குவதற்காக பக்கத்து வீட்டுக்காரரின் 4 வயது குழந்தையை அழைத்து தனது லெக்கின்ஸ் மூலம் குழந்தையை கட்டி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
மகனை காணவில்லை என பலமுறை தேடியும் கிடைக்கவில்லை. குழந்தை காணவில்லை என்று தேடிய தாயை தனது வீட்டில் அனுமதிக்காமல் சுதாகரித்துக் கொண்டுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அக்கம்பக்கத்தினர் வலுக்கட்டாயமாக அவர் வீட்டில் சோதனையிட்டபோது குழந்தை பாத்ரூமில் தண்ணீர் தொட்டியில் தலைகீழாக மூழ்கடிக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்தைக் குறித்து அந்தேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கொலை செய்த பெண்ணை உடனே கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.