பட்டாசு வெடிப்பது பற்றி சர்ச்சையாக பேசிய ரகுல் ப்ரீத்!
நடிகை ரகுல் ப்ரீத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர். ரகுல் ப்ரீத் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்ட போது, அந்த நிகழ்ச்சியில் ஒரு சின்ன பட்டாசு கூட வெடிக்க கூடாது என கண்டிஷன் போட்டிருந்தார். அவர் ஏன் பட்டாசு வெடிக்கமாட்டேன் என சொல்கிறார் தெரியுமா?
சில வருடங்களுக்கு முன்பு ரகுல் அளித்த ஒரு பேட்டியில் “என் அப்பா ஒரு தீபாவளி பண்டிகைக்கு என் கையில் 500 ரூபாய் நோட்டை கொடுத்து அதை தீயிட்டு கொளுத்த சொன்னார். நான் அதிர்ச்சி ஆகி, ஏன் என கேட்டேன்.”
“இதை தான் நீ செய்கிறாய். பணம் கொடுத்து பட்டாசு வாங்கி அதை கொளுத்துகிறாய். அந்த பணத்தில் சாக்லேட் வாங்கி யாருக்காவது கொடுக்கலாம் என கூறினார். அப்போது இருந்து நான் பட்டாசு வெடிப்பதை விட்டுவிட்டேன்” என ராகுல் ப்ரீத் கூறி இருக்கிறார்.
பட்டாசு வெடிப்பதை பற்றி ரகுல் ப்ரீத் இப்படி பேசி இருப்பதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
“500 ரூபாய் நோட்டை எரிக்கச்சொல்லி, எங்க அப்பா, படம் பார்க்க தியேட்டர் போக வேண்டாம் என கூறி இருக்கிறார். அப்படி செய்தால் உங்க தொழில் என்ன ஆகும்” என கமெண்ட் செய்து அவரை விளாசி வருகின்றனர்.