பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட ஷோக்களில் ஒன்று. கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற அடைமொழியுடன் தொடங்கியது. புதியதாக களமிறங்கிய விஜய் சேதுபதியும் பெரிய அளவில் ஸ்கோர் செய்கிறார், விளையாட்டும் சூடு பிடித்துள்ளது.
ரவீந்தர், அர்னவ் இருவரும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதை தொடர்ந்து கடந்த வாரம் வீட்டில் இருந்து தர்ஷா குப்தா வெளியேறினார்.
தற்போது அடுத்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்துள்ளது. அதில் சுனிதா, ஜனனி, ஜாக்குலின், அர்ஷிதா, ரஞ்சித், அருண், சத்யா மற்றும் தீபக் ஆகியோர் வந்துள்ளனர்.
இந்த லிஸ்டில் இருந்து அடுத்த வாரம் வெளியேறப்போவது யார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.