பிரபல ஓடிடியில் வெளியாகும் சிம்புவின் வெந்து தனிந்தது காடு ….!

சிம்புவின் வெந்து தணிந்தது காடு விரைவில் பிரபல ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டடித்துள்ளது.இந்நிலையில் இப்படம் பிரபல ஓடிடியான அமேசான் ப்ரைமில் வரும் தீபாவளியொட்டி வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.