பிரபல கிரிக்கெட் வீரருக்கு புற்றுநோய் பாதிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தோல் புற்றுநோய் இருப்பது ஸ்கிரீனிங் சோதனையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரது மார்பில் இருந்த புற்றுநோய் கட்டியை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியிருக்கின்றனர். சிகிச்சை எடுத்துக்கொண்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டதாகவும், தற்போது படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் சாம் பில்லிங்ஸ் தெரிவித்தார். மேலும் வெயிலில் அதிக நேரம் இருக்க வேண்டாம் என்று அவர் சக கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்காக சாம் பில்லிங்ஸ் மூன்று டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.