பிரபல நடிகரை திருமணம் செய்யும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் நடிப்பில் அயலான், இந்தியன் 2 என அடுத்தடுத்து படங்கள் வெளிவரவுள்ளனர். நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த 2021ஆம் ஆண்டு தன்னுடைய காதலரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இவருடன் தான் Jackky Bhagnani என்பவர் தான் ரகுல் ப்ரீத் சிங்கின் காதலர் ஆவார்.
இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரும், தயாரிப்பாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்த வந்த நிலையில், தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.
அடுத்த மாதம் பிப்ரவரி 22ஆம் தேதி கோவாவில் பிரமாண்டமாக இவர்களுடைய திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரகுல் ப்ரீத் சிங் – Jackky Bhagnani-னுக்கு ரசிகர்கள் தற்போதே தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.