“புட்டபொம்மா” “புட்டபொம்மா”, அல்லு அர்ஜுனின் பொங்கல் பிளாக்பஸ்டர் ‘ஆலா வைகுந்தபுரமுலூ’ பாலிவுட் ரீமேக்கில்!!! ரீமேக் உரிமையின் பின்னணி தகவல்கள்…
ஷாஹித் கபூரின் கடைசி வெளியீடான ‘கபீர் சிங்’ தெலுங்கு ஹிட் ‘அர்ஜுன் ரெட்டி’யின் ரீமேக்காக வெற்றி பெற்ற பிறகு, பல தயாரிப்பாளர்கள் இதுபோன்ற அடுத்த ரீமேக் வாய்ப்பைத் தேடத் தொடங்கியுள்ளனர்.
அல்லி அரவிந்த், நானி நடித்த ‘ஜெர்சி’ படத்தின் உரிமையைப் பெற்றார், இப்போது இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாஹித் நடிக்கிறார்.
தற்போது, பொங்கல் ஒட்டி வெளியான அல்லு அர்ஜுன் நடித்த ‘ஆலா வைகுந்தபுரமுலூ’ படத்திற்கு பாலிவுட் பெரிய தயாரிப்பாளர்கள் அனைவருமே ரீமேக் உரிமைகளுக்காக கடும் போட்டி போட்டுகொண்டுள்ளனர். இந்த படம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஸ்கோரைப் பெற்றது.
அல்லு நடித்த படத்தின் உரிமைகளுக்காக ‘கபீர் சிங்’ தயாரிப்பாளர் அஸ்வின் வர்தே ரூ .8 கோடி வழங்கியதாக செய்தி வெளியானது. ஆனால் சமீபத்திய தகவல்படி, அவரது சலுகை நிராகரிக்கப்பட்டது!. ‘ஆலா வைகுந்தபுர்ரமுலூ’ தயாரிப்பாளர்களுக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் கூறுவது , “இந்த படத்தை அல்லு அரவிந்த் மற்றும் எஸ். ராதா கிருஷ்ணா ஆகியோர் தயாரித்துள்ளனர், தற்போது அல்லு அரவிந்த் ஏற்கனவே இந்தி மொழியில் ‘ஜெர்சி’ ரீமேக்கை தயாரிக்கிறார், இந்நிலையில் ஜெர்ஸி ஒரிஜினல் படம் எஸ். ராதா கிருஷ்ணா சகோதரி நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது.
எனவே இருவரும் இந்த தற்போதைய பிளாக்பஸ்டர் படத்தை வேறு யாருக்கும் விற்க வேண்டாம் என்று முடிவெடுத்து, சொந்தமாக ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் தென் தயாரிப்பாளர்கள் பாலிவுட்டில் ரீமேக்குகளை மற்றவர்களுக்கு விற்காமல் தாங்களே தயாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.