புதரில் பச்சிளம் குழந்தை புதரில் வீச்சு!
கன்னியாகுமரியில் புதரில் பச்சிளம் குழந்தை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மூஞ்சிறை அருகே மங்காடு செல்லும் பகுதியில் புதரில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் வருவதை அந்த வழியாக சென்ற மக்கள் கேட்டு அதிர்ந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு சென்று புதர் பகுதியில் தேடிப் பார்த்த பொழுது உடலில் துணி சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது.
உடனடியாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர். அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து குழந்தையை யார் வீசியது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை புதரில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.