புதிய மருமகளின் வருகை… 10 நாட்களில் ரூ 25,000 கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தமது இளைய மகனுக்கு ஆடம்பரத்தின் உச்சமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
சொத்து மதிப்பு குறையவில்லை
அதே வேளை அவரது சொத்து மதிப்பும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு ஆடம்பரமாக செலவு செய்தாலும், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு குறையவில்லை என்றே கூறுகின்றனர்.
ஆஜ் தக் ஊடகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்குப் பிறகு வெறும் 10 நாட்களுக்குள் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் ரூ 25,000 கோடி (சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்) அதிகரித்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
ஜூலை 5ம் திகதி வெளியான ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு என்பது 118 பில்லியன் அமெரிக்க டொலர் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஜூலை 12ம் திகதி வெளியான தரவுகளில் அது 121 பில்லியன் டொலர் என பதிவாகியுள்ளது.
புதிய மருமகளின் வருகை
இதனால் உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11வது இடத்திற்கு முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
ஆனந்த் அம்பானியின் திருமண நாள் அன்று ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு 1 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக சராசரி 6.65 சதவிகிதம் உயர்வை சந்தித்துள்ளது.
திருமணம் விழாவிற்கு பின்னர் ரிலையன்ஸ் பங்குகளின் விலை ரூ 3,159 என விற்கப்பட்டுள்ளது. புதிய மருமகளின் வருகை, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் சுமார் 3 பில்லியன் டொலர் அளவுக்கு அதிகரிக்க செய்துள்ளது என்றே கூறுகின்றனர்.