பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளிகள் மேற்கு வங்கத்தில் கைது!

April 13, 2024 at 9:19 am
pc

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் 2 பேர் மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 1 ஆம் திகதி பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை, ஆனால் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பத்து பேர் காயமடைந்தனர்.

குண்டு வைக்கப்பட்ட இடத்தில் குறைந்த கூட்டம் மற்றும் வெடிப்பின் தாக்கத்தை கட்டுப்படுத்திய பெரிய தூண் அருகில் இருந்த காரணமாகவே உயிரிழப்பு ஏற்படவில்லை என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று அறிவித்துள்ளது.

முஸ்ஸாவிர் ஹுசைன் ஷாஸெப்(Mussavir Hussain Shazeb) மற்றும் அப்துல் மத்தீன் தாஹா(Abdul Matheen Taha) ஆகியோர் கிழக்கு மித்னாபூர்(Midnapore) மாவட்டத்தின் Kanthi பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை, மத்திய உளவுத்துறை அமைப்புகள் மற்றும் மேற்கு வங்காளம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா காவல்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை அரங்கேறியுள்ளது.

NIA விசாரணையில், ஷாஸெப் தான் ராமேஸ்வரம் கஃபேவில் வெடிபொருளை வைத்ததாகவும், தாஹா தாக்குதலை திட்டமிட்டு தப்பி ஓடுவதற்கு உதவியாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் இது 2வது மற்றும் மூன்றாவது கைது ஆகும். கடந்த மாதம், இவர்களுக்கு உதவி புரிந்ததாக கூறப்படும் முஸம்மில் ஷரீப் (Muzammil Shareef) கைது செய்யப்பட்டார்.

கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 18 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திய பின்னரே ஷாஸெப்பையும், தாஹாவையும் மேற்கு வங்காளத்தில் NIA அதிகாரிகள் கண்டுபிடித்தனர். வரும் நாட்களில் இந்த வழக்கு குறித்து NIA மேலும் விவரங்களை வெளியிட உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website