பெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)
இளவயது பெண்களுக்கு நீர்க்கட்டி வர முக்கிய காரணம் அவர்களுக்கு வருத்தம் அதிகமாக இருப்பது, குடும்ப சிக்கல், கவலை, பயம், பதட்டம் போன்றவை. நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு அதிக கோபம் வரும், இடுப்பு வலி இருக்கும், மாதவிடாய் சரியாக வராது(மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது ஆறு மாதத்திர்ற்கு ஒரு முறை மாதவிடாய் வரும்). நீர்க்கட்டி இருந்தால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும்.
பெண்களை அதிகமாக தாக்கும் பி.சி.ஓ.எஸ்., குழந்தையின்மை பிரச்சனை நோய்
பெண்களுக்கு முக்கிய எதிரியான இந்த நீர்கட்டியை குறைக்க இயற்கையில் வைத்தியம் உள்ளது, அதனை தயாரிக்கும் முறையையும், உட்கொள்ளும் முறையையும் தெளிவாக காண்போம்..
நீர்கட்டி தீர தேவையான இயற்கை மூலிகை பொருட்கள்:
துளசி – ஒரு கொத்து,
கலர்சிக்காய் – 3,
நாட்டு கோழிமுட்டை வெள்ளை கரு – 1,
நல்லெண்ணெய் – 50ml.
குறிப்பு: கலர்சிக்காயை நேரடியாகவோ அல்லது தனியாகவோ சாப்பிட்டால் நீர்க்கட்டி சரியாகாது.
மருத்துவ முறை: 3 கலர்சிக்காயை இடித்து போடி செய்து தூளாக எடுத்துகொள்ள வேண்டும் இதனுடன் துளசி சாறு, ஒரு நாட்டு கோழி முட்டையின் வெள்ளை கரு, ஆகியவற்றை சேர்த்து கலந்து, 50 ml நல்லெண்ணெயை வானலியில் விட்டு அதனுடன் கலர்சிக்காய் நாட்டுகோழி முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை சேர்த்து பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்ததை தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டுவரவும்.
குறிப்பாக இந்த மருத்துவத்தை 7 நாட்களுக்கு மேல் சாப்பிட வேண்டாம் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த இயற்க்கை வைத்தியத்தை செய்து சாப்பிடலாம்.
இதனால் நீர்க்கட்டி கரைந்து மேலும் நீர்க்கட்டி வரமால் தடுக்கலாம்.
சைவமாக இருந்தால் இந்த மருத்துவத்தை எடுத்துகொள்ள வேண்டாம்.