பெண்களை கவர்ச்சியாக பேச வைத்து போன் காலில் ”லோன்” . ஜொள்ளுவிடும் ஆண்களை நேராக வரவைத்து நடந்த கச்சேரி .
மீனா என்ற பெண் சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் வசித்து வந்தவர். இவர் பேங்க் லோன் வாங்கி தருவதாக சொல்லி ஆன்லைனில் தம் தொலைபேசி நம்பரை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த பலர் இவரிடம் வந்துள்ளனர். இவருக்கு உறுதுணையாக சங்கர் என்பவர் இருந்து இருக்கிறார். இவர் பாரிமுனையைச் சேர்ந்தவர் ஆகும்.
நம்பரை தொடர்ப்புக்கொண்டு மீனாவிடம் பேசிய பலர் மணடி அலுவலகத்திற்கு உரிய பொருட்களை எடுத்துகொண்டு வருமாறு கூறியுள்ளார். பிறகு லோன் கேட்டு வந்தவர்களிடம் ஆதார் கார்ட் ,பான் கார்ட் ,ரேஷன் கார்ட் போன்ற அடையாள அட்டையை பெற்று ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளார்.பிறகு லோன் வருவதற்கு ஒரு சில மாதம் ஆகும் என்று கூறி வந்துள்ளனர். பிறகு வாங்கி தருவதற்காக சில ஆயிர ரூபாய்க்களை வாங்கியுள்ளனர்.
சந்துரு, பிரவின்குமார், பெளசியா பேகம் ஆகியோர் பலர் மீனாவிடம் லோன் கேட்டு வந்தவர்கள் ஆகும். சில நாட்கள் கழித்து டிவி ,ஏசி, பிரிட்ஜ் போன்ற மூன்று பொருட்களுக்கு இ.எம்.ஐ கட்டுமாறு மெசேஜ் ஒன்று இந்த மூன்று நபருக்கும் சென்றுள்ளது. இதனை கண்ட மூவர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனை விசாரித்த போலீசார் இவர்கள் வீட்டுற்கு தேவையான உபயோக பொருட்களை தவனை முறையில் பெறப்பட்டதாக தகவலை தெரிவித்தனர். பிறகு போலீசார் மீனாவையும் சங்கரையும் பிடித்து சிறையில் அடைத்தனர்.