பெண்ணின் வயிற்றில் சுரக்கும் மதுபானம்: ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்!

June 8, 2024 at 9:40 pm
pc

கற்பனை செய்து பாருங்கள், ஒரு துளி மது கூட அருந்தாமல் போதையை உணர்வது என்பதை! இதுதான் கனடாவின் Toronto-வை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு சமீபத்தில் கண்டறியப்பட்ட அரிய நோயின் விசித்திரமான யதார்த்தம். இந்த அரிய வகை நோயில் (Auto-Brewery Syndrome), குடல் நுண்ணுயிரிகள் கார்போஹைட்ரேட்டுகளை மதுவாக மாற்றுகின்றன.

இரண்டு வருடங்களாக, அந்த பெண் கடும் சோர்வு, பேச்சில் தடுமாற்றம், இரத்தத்தில் மது அளவு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். ஆனால், அவர் மது அருந்தவில்லை என்று உறுதியாகக் கூறினார்.

இதனால் குழப்பமடைந்த மருத்துவர்கள் நிபுணர்களின் உதவியுடன் பிரச்சனையின் மூல காரணத்தை அடையாளம் கண்டனர்.

அதில் அவரது குடலில் பூஞ்சை காளான் அதிகமாக இருப்பதும், இந்த நுண்ணுயிரிகள் நுணுக்கமான தயாரிப்பாளர்களைப் போல செயல்பட்டு, உடலுக்குள் மதுவை உற்பத்தி செய்து அவரை போதையில் ஆழ்த்துவதே இதற்குக் காரணம் என்றும் கண்டுபிடித்தனர்.

இந்த மர்மமான ஆட்டோ-பிரூவரி சிண்ட்ரோம் என்பது 1940 களில் முதன் முதலில் ஆவணப்படுத்தப்பட்டது. மேலும் இதுவரை 20 க்கும் குறைவான வழக்குகளே உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website