பெரும் அதிர்ச்சி!! அமெரிக்காவில் வகுப்பறையில் மாணவருடன் உறவுகொண்ட 24 வயது ஆசிரியை!
அமெரிக்காவில் 24 வயது ஆசிரியை மாணவருடன் முறைகேடாக உறவுகொண்ட விவகாரத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மின்னெசொடாயில் உள்ள பாடசாலை ஒன்றில் மாற்று ஆசிரியராக பணியாற்றியவர் கெய்ட்லின் தாவோ (24). இவர் 17 வயது மாணவர் ஒருவருடன் காலியான வகுப்பறையில் வலுக்கட்டாயமாக உறவுகொண்டுள்ளார்.
பின்னர் தப்பியோடிய அவருக்கு, மே மாதம் ராம்சே கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கெய்ட்லின் மீது 4ஆம் நிலை குற்றவியல் பாலியல் நடத்தை குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் ராம்சே கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் கெய்ட்லி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அவர், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு ஆறு மாதங்கள் வரை சிறையில் இருப்பார்.
அத்துடன் அவர் உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும், அவரது தண்டனை செப்டம்பர் 10ஆம் திகதி அறிவிக்கப்பட்ட உள்ளதாக தெரிய வந்துள்ளது