பெரும் அதிர்ச்சி !!போதை பொருளை எதிர்த்து போராடியதால் இப்படி செய்தார்களா… கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு!!

August 21, 2024 at 1:45 pm
pc

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா ஜூனியர் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, கொலை செய்த நிலையில், இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும், இந்த சம்பவம் நடந்த கொல்கத்தாவின் அரசு மருத்துவமனையான கே.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கொல்கத்தாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டியும், மருத்துவர்களுக்கு சட்ட ரீதியில் உரிய பாதுகாப்பு அளித்திடவும் தொடர்கள் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. 

இதுஒருபுறம் இருக்க, சிபிஐ தற்போது இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷிடம் கடந்த நான்கு நாள்களாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சம்பவத்திற்கும் முன்னரும், சம்பவத்திற்கு பின்னரும் அவருக்கு வந்த தொலைப்பேசி அழைப்புகளையும் சிபிஐ ஆய்வு செய்து வருகிறது.

மேலும், இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் (Sanjay Roy) மட்டுமின்றி பல பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், இது கூட்டு பாலியல் வன்முறை என்றும் தகவல்கள் வெளிவந்தன. அதுமட்டுமின்றி மருத்துவமனையில் போதைப் பொருளை புழக்கத்தை உயிரிழந்த மாணவி தட்டிக்கேட்டதாகவும், இதனாலேயே அவரை கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சஞ்சய் ராய் என்பவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

விரிவான உடற்கூராய்வு அறிக்கை

இந்நிலையில், பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் மருத்துவரின் விரிவான உடற்கூராய்வு அறிக்கை (Autopsy Report) குறித்த தகவல்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த பெண் மருத்துவர் உயிரிழப்பதற்கு முன்னரே அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் கழுத்து நெறிக்கப்பட்டதை தொடர்ந்து உயிர் பிரிந்துள்ளதும் அறிக்கையில் தெரிகிறது. அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார் என்பதும் மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்பட்டது. 

150 கிராம் விந்தணு இருந்தது உண்மையா?

இருப்பினும், உயிரிழந்த பெண்ணின் பிறப்புறுப்பில் 150 கிராம் அல்லது 150 மில்லி கிராம் அளவு விந்தணு இருந்ததாக கூறப்பட்ட தகவலை இந்த உடற்கூராய்வு அறிக்கை முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களில் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த அறிக்கை அந்த கூற்றுகளை நிராகரித்திருக்கிறது. வெள்ளையான தடிமானான பிசுபிசுப்பு தன்மையுடனான திரவம் ஒன்றை பெண்ணின் உடலில் கண்டெடுத்ததாக கூறப்பட்டாலும், அது என்னது என்பது குறித்து எங்கும் குறிப்பிடவில்லை. 

இருப்பினும், அந்த பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்துள்ளது. தலை, கன்னம், கன்னத்து எலும்புகள், உதடு, மூக்கு, வலது தாடை, கழுத்து, இடது கை, இடது தோள்பட்டை, இடது முழங்கால், கணுக்கால் ஆகிய பகுதிகளில் காயங்கள் தென்பட்டுள்ளன. அந்த பெண்ணின் பிறப்புறுப்பிலும் கூட காயங்கள் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நுரையீரல் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டதையும், உடலின் மற்ற பாகங்களில் ரத்தம் உறைந்திருப்பதையும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முன்னரே அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடற்கூராய்வு அறிக்கை வழக்கின் விசாரணையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website