மகனை அடித்து கொன்றுவிட்டார்கள் என கதறி துடிக்கும் தாய், பெங்களுருவில் நடந்த கொடூரம்

பெங்களூர் பிஜாப்பூர் மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி பரீட்சை எழுத வந்த 19 வயது இளைஞன் காவல்துறையினரால் லத்தியால் அடித்து பிடிக்க முயன்ற போது இளைஞர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் விஜயபுராவில் நடந்து வரும் எஸ்.எஸ்.எல்.சி பரிட்சை மையத்தை தேர்வில் முறைகேடுக்கு உதவ முயற்சித்ததாக 19 வயது இளைஞர் மீது சந்தேகமடைந்த போலீசார் சிறுவனை லட்டி வைத்து நெருங்க முற்பட்டபோது அவர் பைக்கில் ஏறி தப்பித்ததாகவும், அப்போது காவலர் சிறுவனின் பைக்கை தாக்கியதில் அடிக்கும் போது சிறுவன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளான்.

இறந்த சிறுவன் அவர் தனது சகோதரியை விட சென்றதாகவும், எந்த முறைகேடிலும் ஈடுபடவில்லை என்றும் கூறுகின்றனர். மேலும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
