மகளின் தோழியை கடத்தி கற்பழித்த தொழிலாளி!வீட்டில் அடைத்து கொடுமை …
கருமத்தம்பட்டியில் மகளின் தோழியை கடத்தி கற்பழித்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோவை கருமத்தம்பட்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
சிறுமியின் பெற்றோர் அவரை தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். கடந்த 21-ந் தேதி பெற்றோர் சிறுமியை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து மில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, மாயமாகி விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கோவை வந்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமி குறித்து விசாரிக்க தொடங்கினர்.
அப்போது சிறுமியின் சொந்த ஊரை சேர்ந்த தேவேந்திரன்(38) என்பவர் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் சிறுமியுடன் எங்கு தங்கி உள்ளார் என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். அவர்களது உறவினர்கள் உள்பட பலரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் தேவேந்திரனின் செல்போன் எண்ணை வாங்கி அதன்மூலம் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
செல்போன் எண்ணின் டவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் இருப்பதை காண்பித்தது. இதையடுத்து கருமத்தம்பட்டி போலீசார் கண்ணூர் சென்று, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டனர். பின்னர் 2 பேரையும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.