மகளை விட அம்மாவுக்கு டிரஸ் குறைச்சலா இருக்குது.. பிக்பாஸ் ஷிவானி வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

September 18, 2024 at 7:30 pm
pc

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு மகளை விட அம்மாவுக்கு டிரஸ் குறைச்சலா இருக்கு என நெட்டிசன்கள் கலாய்க்கும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் காரணமாக அவர் பிரபலமான நிலையில் ஒரு சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமி ஷிவானி நாராயணன் பிரபலம் என்பதும் அவர் நான்கு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது கிளாமர் வீடியோக்கள், புகைப்படங்கள், ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பதிவு செய்து வரும் ஷிவானி நாராயணன் சற்றுமுன் இரவு நேரத்தில் ஒரு தெருவில் அம்மாவுடன் ஜாலியாக வாக் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் அம்மா, மகள் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஒரே டிசைனில் டிரஸ் அணிந்து உள்ள நிலையில் ஷிவானியை விட அவரது அம்மாவின் உடை குறைச்சலாக இருப்பதாக நெட்டிசன்கள் கவனித்து கமெண்ட்களை குவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website