மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகரும் பெங்கல் புயல்.., 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான பெங்கல் புயல் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான பெங்கல் புயல் சென்னைக்கு அருகில் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
நாகையிலிருந்து தென்கிழக்கே 260 கி.மீ, புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 270 கி.மீ, தொலைவில் ஃபெங்கல் புயல் மையம் கொண்டுள்ளது.
இதனால், புயல் உருவாகியதன் எதிரொலியால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதன்படி, பாம்பன், தூத்துக்குடியில் திடீர் காற்று மற்றும் மழை உருவாவதை எச்சரிக்கும் விதமாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை, காரைக்கால் துறைமுகங்களில், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையை கடக்கும் என்பதை எச்சரிக்கும் விதமாக 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில், துறைமுகத்தின் வலதுபக்கமாக புயல் கரையை கடக்கும் என்பைத தெரிவிக்கும் விதமாக 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில், துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என எச்சரிக்கும் விதமாக 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.