மத்திய அரசிடம் ரூ.2 ஆயிரம் கோடி கேட்கும் கேரளா
வயநாட்டில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் மற்றும் வனத்துறை அமைச்சர் சசீதரன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம்’ என தெரிவித்தனர். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை வீடுகளில் குடியமர்த்தும் பணி விரைவில் தொடங்கும் எனவும் கூறினர்.