மனைவியை வைத்து சூதாடிய கணவன்: 7 ஏக்கர் நிலம், நகைகள் பறிப்போன அவலம்!
இந்தியாவில் மனைவியை வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த கணவர் ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையான நிலையில், இறுதியில் தன்னுடைய மனைவியை வைத்தே சூதாடியுள்ளார். மனைவியை வைத்து சூதாடியதோடு தன்னுடைய மனைவியை நண்பர்கள் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் செய்யவும் அனுமதித்துள்ளார்.
கணவனின் கொடூர செயல்களை தடுக்க மனைவி முயன்ற போது, அவருடைய கை விரல்களை உடைத்து சித்திரவதையும் செய்துள்ளார்.
தன்னுடைய கணவர் தீவிரமான மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்தில் மூழ்கி கிடப்பதாகவும், இதனால் இதுவரை 7 ஏக்கர் நிலம், நகைகள் ஆகிய பல பொருட்களை இழந்து இருப்பதாகவும் மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மனைவியை வைத்து சூதாடிய கணவன் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.