மனைவி குளிக்க 418 கோடியில் தனித்தீவு வாங்கிய கணவன்!
நீச்சல் உடையில் குளிக்க ஆசைப்பட்ட மனைவிக்காக, அவரது கணவர் 418 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு தனித்தீவை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஜமால் என்பவரது மனைவி சவுதி அல்நாத், இங்கிலாந்தில் பிறந்தவர் . துபாயில் படித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
மனைவி மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட ஜமால், அவருக்காக ஏராளமான மதிப்பு மிகுந்த பரிசுப் பொருட்களை வாங்கித் தந்துள்ளார். இந்த நிலையில், தனது மனைவி பிகினி உடையில் நீச்சல் குளிக்க ஆசைப்பட்டதால், ஜமால் அவருக்காக ஒரு தனித்தீவை வாங்கியுள்ளார்.
அந்த தீவின் மதிப்பு 418 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மனைவியின் தனி உரிமை மற்றும் பாதுகாப்புக்காக தீவின் இருப்பிடத்தை அவர் வெளியிடவில்லை.
418 கோடி ரூபாய் செலவில் தனது கணவர் தனி தீவை வாங்கியதற்கு மனைவி நன்றி தெரிவித்ததுடன், ‘என் கணவர் வாங்கிய தீவு ஆசியாவில் தான் உள்ளது, ஆனால் தனி உரிமை காரணமாக அதன் இடத்தை பகிர விரும்பவில்லை.
எனினும், கணவர் என் மீது வைத்துள்ள அன்பையும் பாசத்தையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்’ என கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார்.