மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்!!வெளுத்து வாங்கிய கிராம மக்கள்
விருத்தாசலம் அருகே தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தலைமை ஆசிரியரை கிராம மக்கள் அடித்து இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் செயல்படும் தனியார்ப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் பென்னிக்ஸ் என்பவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக எழுந்த சர்ச்சை அடிப்படையில் கிராம மக்களும் பெற்றோர்களும் இணைந்து அவரை அடித்து இழுத்து வந்தனர்.
அரைகுறை ஆடைகளுடன் சாலையில் பொடி நடையாக நடக்க வைத்தே அழைத்து வந்து காவல்நிலைய வாகனத்தில் ஏற்றிவைத்தனர். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் அடித்து இழுத்து வரக்கூடாது என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இருப்பினும் அங்கிருந்த பொதுமக்கள் அவரை அடித்து இழுத்து வந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.