மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை ..தனியார் பள்ளி ஆசிரியர் ..!!
பாலியல் தொல்லை புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 8-ம் வகுப்பு சிறுமி கடந்த வியாழக்கிழமை, பள்ளி சென்ற மாணவி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்ற மகளை காணவில்லை என மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்தபோது, மாணவியை அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய முபாரக் என்பவர் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் விசாரணை செய்த, காவல் துறையினர், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 8-ம் வகுப்பு படிக்கு சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்ற ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
தனியார் பள்ளியில் படித்த சிறுமியை, பள்ளியில் பணியாற்றிய ஆங்கில ஆசிரியரே கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.