மாமியாரின் கள்ளக்காதலன் மருமகளை தாக்கிய கோரம் !என்ன நடந்தது தெரியுமா?

கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. இவர் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு 6 மாதத்திற்கு முன்பு முகேஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
இதனிடையே மாமியார் வீட்டில் இருந்த அவர், மாமியார் தகாத உறவில் நபருடன் பழகி வந்துள்ளார். வைஷ்ணவி வீட்டில் இருக்கும்போதே அவர் வந்து சென்றதால், ஆத்திரமடைந்து மாமியாருடன் மருமகள் சண்டையிட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு அவன் மாமியாரை பார்க்க வந்ததால், அந்த நபரை வாசலில் மறைத்த மருமகள் வைஷ்ணவி, அவரை உள்ளே விடாமல் தடுத்துள்ளார்
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வைஷ்ணவியின் முகத்தை பலமாக தாக்கியுள்ளார். இதில் வைஷ்ணவியின் கண் அருகே கடுமையான காயமும் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, உடனடியாக மருமகள் வைஷ்ணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைஷ்ணவி, கணவர் வேலைக்கு சென்றதும் மாமியார் தன்னை ஒரு அறையில் வைத்து பூட்டி விடுவார் என்றும், தண்ணீர் கேட்டால், டாய்லெட் தண்ணீரை குடித்துக்கொள் என கூறி விடுவார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.