மாமியாரை வெளியே துரத்திவிட்டு.., தன் கோபத்தை மனைவி மீது காட்டிய கணவர்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஹரி (40) இவர் மனைவி கோமதி (35) இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். ஹரி ஒரு எலக்டிரிஷியன். வேலைக்கு ஒழுங்காக போக தினமும்
குடித்துவிட்டு மனைவியை அடித்துள்ளார். கோமதி மீது சந்தேகப்படுவாராம்.. தினமும் சண்டையும்
நடக்குமாம்.”
கோமதிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை கார்ப்பரேஷனில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை தற்காலிகமாக கிடைத்துள்ளது.. ஏற்கனவே ஹரியை சந்தேகப்பேய் ஆட்டிப்படைக்க, கோமதி வேலைக்கு போகவும் சந்தேகம் அதிகமாகிவிட்டது. கோமதியை போதையில் கண்மூடித்தனமாக அடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் கோமதி விருகம்பாக்கத்தில் உள்ள தன் அம்மாவுக்கு போன் செய்து பிரச்சனையை கூறுவார் அம்மாவும் நீலாங்கரைக்கு வந்து இருவரையும் சமாதானம் செய்துவைத்து விட்டு போவாராம்.
ஒரு நாள் பிள்ளைகள் வெளியே விளையாடி கொண்டிருக்க, தம்பதி இருவரும் வீட்டிற்குள் சண்டை போட்டு கொண்டிருந்திருக்கிறார்கள். கோபம் இதை தட்டிக் கேட்டபோது, மாமியாரை வீட்டை விட்டு வெளியே போகும்படி கோபத்தில் ஹரி சத்தம் போட்டுள்ளார். இதனால் வெளியே வந்து நின்று கொண்டுள்ளார் கோமதியின் அம்மா.
ஆனால், அவர் விருகம்பாக்கத்துக்கு சென்றுவிட்டதாக நினைத்து, ஹரி கோமதியை சரமாரியாக தாக்கி உள்ளார்.. திடீரென அலறல் கேட்கவும் வெளியே நின்று கொண்டிருந்த அம்மா, பதறியடித்துக் கொண்டு உள்ளே போனால், தரையில் கோமதியை படுக்க வைத்து அவரது கழுத்தை கரகரவென ஹரி அறுத்து கொண்டிருந்தார்.
அலறி துடித்த தாய், மகளின் உடலை மீட்டு கொண்டு போய் ஆஸ்பத்திரியில் அனுமதித்தும், உயிர் ஏற்கனவே போய்விட்டது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதையடுத்து நீலாங்கரை போலீஸார், கோமதி சடலத்தை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அதற்குள் போலீஸ் ஸ்டேஷனில் ஹரி
சரணடைந்தார். 2 குழந்தைகள் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது.