மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி .
தளபதி விஜய் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் தான் மாஸ்டர். இப்படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்கள். இதற்கான வேலைகளும் போய்க்கொண்டிருக்கிறது. தற்போது படத்தின் அறிவிப்புகளை வெளியிடுவதற்கான வேலைகளில் மும்முரமாக இரங்கியுள்ளது படக்குழு.
படத்தின் எதிர்பர்ப்புகளை அதிகரிக்கும் விதமாக படத்தின் போஸ்டர்களை வெளியிட்டது படக்குழு. இதனை அடுத்து மாஸ்டர் படத்தின் முதல் சிங்கள் டிராக் குட்டி ஸ்டோரி வெளியானது. இதனை அடுத்து தற்போது அனைவரின் எதிர்பார்ப்பும் இசை வெளியீடு பற்றி தான்.
தற்போது மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்சுக்காக தான் விஜய்யின் அனைத்து ரசிகர் பட்டாளமும் காத்துகொண்டு இருக்கிறது. இவர் இந்த ஆடியோ லாஞ்சில் என்ன பேச போகிறார். மேலும் அவரின் குட்டி கதை எந்த விதமான கதை இருக்கும் என்று கேட்பதற்கே பல லட்ச ரசிகர்கள் கூடுவார்கள்.
ஆனால், இந்து முறை தனது மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு தனது ரசிகர்கள் வரக்கூடாது என்று விஜய் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கண்டிஷன் எதற்காக என்றால் “தன்னை பார்க்க வரும் ரசிகர்கள் காவல் துறையினரிடம் அடி வாங்குவதை தன்னால் பார்க்க முடிவில்லை” என்று நினைத்து தான் தளபதி விஜய் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
தளபதி படம் என்றாளே ஆடியோ லாஞ்சிற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும். காரணம் தளபதியின் பேச்சு பெரிய அளவில் பேசப்படும், தொடர்ந்து வைரலாகி வரும். இசை வெளியீடு பற்றி அதிகார பூர்வ அறிவிப்பி படக்குழு இன்னும் சில தினங்களில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.