மியா கலிஃபாவால் ஹனிமூனுக்கு சென்ற ஜோடிக்கு நடந்த சோகம்…!! வைரலாகும் வீடியோ…

June 26, 2022 at 3:36 pm
pc

மியா கலிஃபாவால் ஹனிமூன் சென்ற இடத்தில் கணவன் மாட்டிக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில்வைரலாகியுள்ளது.

மியா கலிஃபா

பிரபல டிக்டாக் பிரபலம் லியோ மேரிலா தனது கணவருடன் பாரீஸ் நகருக்கு தேனிலவுக்காக சென்றுள்ளார். இதே இடத்துக்கு பிரபல ஆபாச பட நடிகையாக அறியப்படும் மியா கலிஃபாவும் சென்றுள்ளார்.

https://twitter.com/miakhalifa/status/1536334826898395142?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1536334826898395142%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fibctamilnadu.com%2Farticle%2Fwife-upset-man-recognises-mia-khalifa-on-honeymoon-1656221666

இதனிடையே பாரீஸில் பல இடங்களை சுற்றிப் பார்த்த இந்த ஜோடி மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளனர். அப்போது இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் உணவகத்தில் மியா உணவருந்தி கொண்டுள்ளார்.

 டிக்டாக் பிரபலம்

அவரை அடையாளம் கண்டு கொண்ட லியோவின் கணவர் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து நடந்த சம்பவத்தை தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் வீடியோவாக பதிவிட்ட லியோ மேரிலா அதில் மியா கலிஃபாவையும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

https://twitter.com/miakhalifa/status/1536298741090623488?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1536298741090623488%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fibctamilnadu.com%2Farticle%2Fwife-upset-man-recognises-mia-khalifa-on-honeymoon-1656221666

இந்த வீடியோவுக்கு பதிலளித்த மியா நாளை தான் ஷாப்பிங் செல்வதாக தெரிவித்துள்ளார். அதற்கு லியோ அப்படியானால் நாங்கள் ஹெர்ம்ஸ் ஷோரூமில் இருக்கிறோம். இங்கே வந்தால் என்னை சந்திக்கலாம் என கூறியுள்ளார்.

கணவர் மகிழ்ச்சி

உடனடியாக மியா அங்கு செல்ல அவரைப் பார்த்து லியோவின் கணவர் மகிழ்ச்சியடைந்துள்ளார். ஆனால் மனைவியான தன்னை வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணை எப்படி பார்க்கலாம் என லியோ கோபப்பட்ட அவரை சமாதானப்படுத்த

கணவர் அந்த ஷோரூமில் இருந்த பிர்கின் ரக ஹேண்ட் பேக்கை வாங்கி சமாதானம் செய்துள்ளார். பிரான்ஸின் மிக விலை உயர்ந்த பிராண்டான பிர்கின் பேக்கின் விலை ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையாகும்.

வைரல்

இறுதியாக பேக்கை வாங்கி கொண்ட லியோவும், நடந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்ட மியாவும் சிரிப்பது போன்ற வீடியோவை மியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிகழ்வு கடந்த வாரம் நடந்தாலும் வீடியோ தற்போது தான் வைரலாகியுள்ளது.

கிட்டதட்ட 6 லட்சம் பார்வைகளை கடந்த வீடியோவுக்கு பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் மியாவை பார்க்க வேண்டும் என்றால் என் மனைவிக்காக, மொத்த கடையையும் ஒரேயடியாக காலி செய்ய வேண்டும் என நக்கலாக தெரிவித்துள்ளார்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website