முட்டாள் சகோதர்களே,,, ஏன் வெளியே சுத்திட்டு இருக்கீங்க – நடிகர் மாதவன் காட்டம் !!
கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்கும் முயற்சியில் 21 நாட்களுக்கு இந்தியா முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலரும் நிலைமை புரியாமல் பொறுபாற்று வெளியே வாகனங்களில் சென்றுவருகின்றனர். அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகளிடம் கைக்கூப்பி கெஞ்சிய ஒரு போக்குவரத்து போலீஸ்காரரின் முயற்சியை நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார்.
இது குறித்து மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக காவல்துறையினர் எல்லாவற்றையும் பணயம் வைத்து, நம்முடைய சில முட்டாள் சகோதரர்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். இந்த போலீஸ்காரர்களுக்கு நான் மிகவும் அன்பு, மரியாதை மற்றும் நன்றியை தெரிவிக்கிறேன். தமிழ்நாடு காவல்துறைக்கு வணக்கங்கள். நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.