மூட்டு வலியை அடியோடு விரட்டும் பூண்டு எண்ணெய்!

July 6, 2024 at 7:24 pm
pc

மூட்டு வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் மத்தியிலும் இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதற்கு சிறந்த நிவாரணமாக பூண்டு எண்ணெய் உள்ளது. மூட்டு வலி என்பது ஒரு 30 வயதிற்கு மேல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு பல வைத்தியங்களை மேற்கொண்டாலும் அவ்வளவு சுலபமாக இதை போக்க முடியாது.

ஆனால் இதை வீட்டு வைத்தியங்கள் மூலம் சுலபமாக சரி செய்ய முடியும். எனவே மூட்டுவலிக்கு மருந்தகங்களில் வாங்க வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் ஒரு மருந்தாக பூண்டு எண்ணெய் உள்ளது. இதை தயாரிப்பதற்கு டுகு எண்ணெய் மற்றும் பூண்டு, கிராம்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் கடுகு எண்ணெய் ஊற்றி அதில் 8-10 பல் பூண்டு சேர்க்கவும். இப்போது நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இதனை மெல்லிய சூட்டில் வைத்து செய்ய வேண்டும் பூண்டு கருப்பாக மாறியதும் கிராம்பை இதில் சேர்த்து சிறிது நேரம் அப்படியே விடவும். இப்போது இந்த எண்ணெயைக் கொண்டு மூட்டுகளை மசாஜ் செய்யவும்.

இதை தினமும் தூங்கும் முன் செய்து வந்தால் சில நாட்களில் நிவாரணம் பெறலாம். மசாஜ் செய்வதற்கு முன் எண்ணெயை சிறிது சூடாக்கி வந்தால் அதிக பலன்கள் கிடைக்கும்.

இதை தினமும் நீங்கள் கடுகு எண்ணெயுடன் தினமும் மசாஜ் செய்வது மூட்டு மற்றும் தசை வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். இது மூட்டு வலி மட்டுமல்லாமல் அழற்சியில் இருந்தும் நிவாரணம் தரும்.பூண்டு எண்ணெய் பொதுவாக அதிகமான மருத்துவ குணங்கள் கொண்டது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website