மேட்டுப்பாளையத்தில் பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொலை…!!! பிரேத பரிசோதனை முடிவில் தகவல்…!!!

கோவையில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே விளைநிலத்தில் பெண் யானை மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டது.
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கண்டியூர் பீட் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலத்தில் இன்று (ஜூலை 02) காலை, சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை காது பகுதியில் காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் 2 பேர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.