மேட்ரிமோனி என கூறி இளம் பெண்ணிடம் லட்சக்கணக்கில் ஆட்டையை போட்ட பலே திருடன் !! நூதனமாக சிக்கவைத்த பெண்

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்தவர் என்ஜினீயரிங் பட்டதாரியான ராகேஷ் சர்மா (வயது 36). இவர் கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம், மேட்ரிமோனி மூலம் அறிமுகம் ஆனார். அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அந்த பெண்ணிடம் மூளை சலவை செய்து 5½ லட்ச ரூபாய் பணம் மற்றும் 20 பவுன் நகை ஆகியவற்றை வாங்கியுள்ளார்.
அடிக்கடி காசு கேட்பதால் ராகேஷ் சர்மா மீது அந்த இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தனது தந்தையிடம் அவர் கூற அவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இது தெரியாமல் ராகேஷ் சர்மா மீண்டும் அந்த பெண்ணுக்கு போன் செய்து 2000 ஆயிரம் ரூபாய் பணம் கேட்க அவர் போலீசார் அறிவுரைப்படி மாதவரம் ரவுண்டானா அருகே வரும்படி கூறியிருக்கிறார். சொன்ன இடத்திற்கு ராகேஷ் சர்மா வர போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
ராகேஷ் ஷர்மாவிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். திருமணமாகி மனைவி பிரிந்து சென்றதை அடுத்து கத்தாரில் வேலை பார்த்துள்ளார். வெளிநாடுகளை சேர்ந்த பெண்களையும் ராகேஷ் சர்மா ஏமாற்றி இருப்பதாக தெரிகிறது. நான் அவன் இல்லை படம் பார்த்து ஐடியா வந்ததாக கூறியுள்ளார். இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்களை ராகேஷ் சர்மா ஏமாற்றி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்ரிமோனி என கூறி இப்படி பல மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துகொண்டு தான் இருக்கிறது.