மொத்த குடும்பமும் மண்ணில் புதைந்த கொடுமை!!நிர்கதியாய் கதறும் இளம்பெண்
வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் மொத்த குடும்பத்தையும் இழந்து திருமணப்பெண் ஒருவர் தனியாளாக நிற்கிறார்.
கோர சம்பவம்
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 -க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மண்ணில் புதைந்தவர்களை கண்டறியும் பணியை மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். தனது குடும்பத்தினர் உயிரோடு வரமாட்டார்களா என்று அங்குள்ள மக்கள் கண்ணீருடன் கதறுகின்றனர்.
குடும்பத்தை இழந்த திருமண பெண்
இந்நிலையில், வெள்ளார்மல அரசு பள்ளி மண்ணுக்குள் புதைந்தது. இந்த பள்ளிக்கு அருகே சிவண்ணன் என்பவரின் குடும்பம் வசித்து வந்துள்ளது. இவரின் குடும்பத்தில் மொத்தம் 9 பேர் உள்ளனர்.
இதில், மூத்த மகள் சுருதியை தவிர மற்ற அனைவரும் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். சிவண்ணன், மனைவி சபிதா, தந்தை போமலப்பன், தாய் சாவித்திரி, மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா ஆகியோர் ஒரு வீட்டிலும், பக்கத்துக்கு வீட்டில் சிவண்ணனின் சகோதரர் மற்றும் அவரது மனைவி மகள் என வசித்து வந்துள்ளனர்.
இதில், மகள் ஸ்ருதி கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். மற்றொரு மகள் ஸ்ரேயா கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், தங்கை ஸ்ரேயாவின் உடல் மேப்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்த ஸ்ருதி கதறி அழுதுள்ளார். அதனை பார்த்தவர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் ஸ்ருதிக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்துவந்த நிலையில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
இவரது வீடு வெள்ளத்தில் அடித்துச் சென்ற நிலையில் குடும்பத்தில் உள்ள மற்ற 7 பேர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.