ரஜினிக்கு வில்லனாகும் முன்னணி நடிகர்!
லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ளது தலைவர் 171. ரஜினிகாந்துடன் முதல் முறையாக லோகேஷ் கைகோர்த்துள்ளார். இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் துவங்கும் என கூறப்படுகிறது.
இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க சரியான நடிகர் ஒருவரை தேடி வருகிறாராம் லோகேஷ்.
இந்நிலையில், மலையாள நடிகர் பிரித்விராஜ் தான் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்கப்போவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விக்ரம் படத்தில் பிரித்விராஜை நடிக்க வைக்க லோகேஷ் முயற்சி செய்துள்ளார். ஆனால், அது நடக்கவில்லை.
இதனால் கண்டிப்பாக தலைவர் 171 படத்தில் பிரித்விராஜ் ரஜினிக்கு வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.