ரஜினியின் ஜெயிலர் போஸ்டருக்கு தனுஷின் டிவிட் ரியாக்ஷன் இதுதான்!

August 22, 2022 at 4:15 pm
pc

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்திற்கான ப்ரீ ப்ரடெக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

மிரட்டல் லுக்

இதனை முன்னிட்டு ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டது. இதில் கண்ணாடி அணிந்தப்படி வயதான தோற்றத்தில் உள்ள ரஜினிகாந்த் பின்னால் கைகளை கட்டியப்படி மிரட்டல் லுக்கில் உள்ளார்.

தனுஷ் ரியாக்ஷன்

இதனை பார்த்த ரசிகர்கள் மாஸ், டெரர் லுக் என டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். பிரபலங்கள் பலரும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரீடிவிட் செய்து வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் மூத்த மருமகனான தனுஷும் ஜெயிலர் போஸ்டருக்கு ரியாக்ட் செய்துள்ளார்.

ரசிகர்கள் ஹேப்பி

ஜெயிலர் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள தனுஷ், Wow!! என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர். தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த சில மாதங்களாக பிரிந்திருந்த நிலையில் தங்களின் மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஜினியின் ஜெயிலர் போஸ்டரை பார்த்து வாவ் என தனுஷ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் டிவிட்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website