ரம்யா பாண்டியனுக்கு டும் டும் டும்….மாப்பிளை இவர்தானாம்..
ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் யோகா மாஸ்டரை காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், தனது காதலரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில்,அவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் ரொமான்டிக் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எப்போதும் லைம் லைட்டில் இருந்து கொண்டிருக்க ஆசைப்படுபவர்கள் தான் நடிகைகள் அதற்காக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். சிலர் இணையத்தில் பரபரப்புக்காக எதையாவது பேசி அதை சர்ச்சையாக்கி அதன் மூலம் பிரபலமாவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இப்படி சில நடிகைகள் இருந்தாலும் அவர்களுக்கு எதிர்பார்த்த படவாய்ப்பு வருவதில்லை.இப்படி எந்தவிதமான சர்ச்சையும் வேண்டாப்பா சாமி, நடிக்க பட வாய்ப்பு வந்தா வருது இல்லை என்றால், இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று சினிமாவை ஒப்புக்கு வைத்துக்கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வரும் நடிகைகளில் முக்கியமானவராக இருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.
நடிகை ரம்யா பாண்டியன்: அப்படி போட்டோஷூட் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால், இவர் மற்ற நடிகைகளைப்போல போட்டோஷுட்டுக்காக பணத்தை செலவு செய்யாமல், மொட்டைமாடியில், தனது வளைந்து நெளிந்து இருக்கும் தனது இடையழகை காட்டி போட்டோ எடுத்து ஒரே போட்டோஷூட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். இணைதயத்தில் ஏராளமான பாலோர்களை வைத்து இருக்கும் இவர், தனது ரசிகர்களுக்காகவே விதமான போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அழகின் ரகசியம்: பிரபலமான கையோடு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு பெயரை பெற்றுத்தராததால், போட்டோஷுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுகளாக ரம்யா பாண்டியன் அவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவரின் திருமணம் ரிஷிகேஷில் அடுத்த மாதம் 15ந் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலனுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ப ரம்யாபாண்டியன் செல்லத்திற்கு கல்யாணமா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.