”ரயில் பெட்டியில் இறந்த உடல்” இப்படி ஒரு சேவையை ”Red Cross” சொசைட்டி செய்வது உங்களுக்கு தெரியுமா ?எனக்கும் தெரியாது

November 20, 2019 at 11:13 am
pc

அரசாங்க அமைப்புகளில் அனைவருக்குமே பயன்படும் வகையில் சில நல்ல நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு இது போய் சேரவே இந்த பதிவு. முடிந்தவரை இதைப் பகிருங்கள். அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்பதே இதன் நோக்கம். சமீபத்தில் சென்னையில் நெருங்கிய நண்பர் ஒருவரது தந்தையார் புற்றுநோயால் காலமானார். உடலை சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு எடுத்துக்கொண்டு போய் இறுதிச் சடங்குகள் செய்ய திட்டமிட்டிருந்தனர்.அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அதிகாலை சுமார் 2.30 அளவில் காலமானார். அவரது உடலை அன்றே சொந்த ஊரில் தகனம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

அதிகாலை 3.00 மணிக்கு நண்பர் மருத்துவமனையை அடைகிறார். அங்குள்ள மருத்துவர்கள் அவரின் தகனம் செய்யும் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்கின்றனர். நண்பருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு புறம் தந்தை இறந்த துக்கம். மறுபுறம் எப்படி எடுத்து அன்றே தகனம் செய்வது என்ற நெருக்கடி.

மருத்துவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி, உங்களுக்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று அரசாங்க வாகனம். மற்றொன்று தனியார் வாகனம் . நீங்கள் அரசாங்க வாகனத்தை உபயோகித்தால், உங்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு இல்லை. நீங்கள் தனியார் வாகனம் உபயோகித்தால் சுமார் ரூ.8000 முதல்
ரூ.15000 வரை கேட்பார்கள் என்று கூறினார்கள். நண்பரோ,
தனியார்தான் சிறந்தது என்றெண்ணி, அவர்களை தொடர்புக்கொண்டார். அவர்கள் சுமார் 8000 ரூபாய் செலவு ஆகும் என்றனர். மீண்டும் மருத்துவர்களைப் பார்த்து பேசிய நண்பர், அவர்களின் அறிவுரைப்படி,
அரசாங்க ஊர்தியின் விலையில்லா கட்டண தொலைபேசியை 155377ஐ அழைத்து விசாரித்திருக்கிறார். “நீங்கள் எங்கே உடலை எடுத்துச் செல்லவேண்டும்?” என்று அவர்கள் கேட்டுள்ளார்கள். நண்பர் விவரம் சொல்லவே, “நிச்சயம் நாங்கள் சிறந்த முறையில் உங்களின் பயணத்தை அமைத்து தருகிறோம் நீங்கள் ஆக வேண்டியதை முடிக்க சுமார் 3 மணி நேரமாகும், முதலில் அதை கவனியுங்கள் மற்றவை என்ன என்பதை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்!” என்றனர்.

அவர்கள் சொன்னபடி, நண்பரும் சுமார் 7.30 மணிக்கு மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு, நண்பர் அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் நண்பரிடம், “சார் எங்களால் 100 கி.மீ வரைதான் இலவசமாக செல்ல இயலும். நாங்கள் உங்களுக்காக ஒரு மாற்று ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி, காலையில் குருவாயூர் விரைவு இரயிலில் உங்களுக்கு போதிய வசதிகள் செய்துள்ளோம். உடலோடு ஒருவர் இலவசமாக செல்லலாம்” என்று கூறி ரயிலில் இஞ்சின் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் உடலை ஏற்றி விட்டார்கள்.
கவனிக்கவும் – இதுவரை அப்படி ஒரு வசதி ரயிலில் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அனைத்து ரயிலிலும் இந்த வசதி உள்ளது.

A wooden coffin with a metal crucifix and handles on an isolated white studio background – 3D Render

திருச்சியை நெருங்கும் வேளையில், நண்பருக்கு ஒரு அழைப்பு அலைபேசியில். அவர்கள் அரசாங்க ஊர்தியின் பணியாட்கள். “நீங்கள் திருச்சி சந்திப்புக்கு வந்ததும், தொடர்புகொள்ளுங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!” என்றனர். நண்பர் அவர்கள் சொன்னபடி, தொடர்வண்டி திருச்சி வந்ததும்,
அந்த எண்ணை அழைத்துள்ளார். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவர்கள் நடைமேடையிலேயே அவர்களின்
வருகைக்காக காத்திருந்தனர். வந்தவர்கள் இரண்டே நிமிடங்களில் உடலைத் தூக்கிகொண்டு ஊர்தியில் வைத்து, சொன்ன நேரத்திற்கெல்லாம் அங்கிருந்து கிளம்பி, ஊருக்கு உரிய நேரத்தில் எடுத்துச் சேர்த்துள்ளனர். நண்பரும் அவர் குடும்பத்தாரும், திட்டமிட்டபடி இறுதிச் சடங்குகளை குறித்த நேரத்திற்கெல்லாம் முடித்துள்ளார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website