ரஷ்யாவில் தவிக்கும் விக்ரம் “கோப்ரா” படக்குழு.. கொரோனா அச்சத்தால் ஷூட்டிங்கை பேக்-அப் செய்துள்ளது !!
விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தில் முதல் போஸ்டர் சம்பத்தில் வெளியானது. தற்போது படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்துகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பரவும் கொரோனா பாதிப்பது ரஷ்யாவில் பெரும் அளவில் காணப்படுகிறது.
இதனால் கோப்ரா படப்பிடிப்பை உடனடியாக ரத்து செய்துள்ளார்கள். மேலும் ரஷ்யாவில் முடங்கி கொண்டிருக்கும் படக்குழுவினர் தங்கள் சந்திக்கும் இன்னல்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர், இன்று படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார், அதில், இந்திய இந்திய அரசர்கள் விதித்த பயண தடையினால் படக்குழு உடனடியாக அனைத்தையும் முடக்கிவிட்டுள்ளதாக கூறினார்.
இந்தியா வருவதை ரஷ்யாவில் உள்ள கோப்ரா படக்குழு ஆலோசனை நடத்திவருகிறது. மேலும் இவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்து தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.