ரூ.600 கோடி செலவில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி படத்தின் முதல் விமர்சனம்!

பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமா கொண்டாடும் நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். அப்படத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட் படங்களாக பான் இந்தியா படமாக நடிக்கிறார், ஆனால் எந்த படமும் சரியான ஹிட் கொடுக்கவில்லை. தற்போது மகாநதி படத்தை இயக்கிய நாக் அஷ்வின் இயக்கத்தில் ரூ. 600 கோடி செலவில் பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிக்க கல்கி 2898 ஏடி என்ற படம் தயாராகியுள்ளது.
2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பட படப்பிடிப்பு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நடைபெற்றது. மகாபாரத கதையில் ஆரம்பித்து கலியுகம் என கூறப்படும் 2898ம் ஆண்டு வருடம் நிகழ்பவைகளை வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் கல்கி படத்தை இந்திய திரைப்பட தணிக்கை குழுவினர் பார்த்துள்ளனர். படத்தின் சில காட்சிகள் ஹாலிவுட் அளவிற்கு இருப்பதாகவும், படத்தின் இறுதியில் அவர்கள் எழுந்து நின்று கைத்தட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்திய சினிமாவில் இதுவரை காணாத பல அம்சங்கள் இந்த படத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கண்டிப்பாக படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை பெறும் என்றும் கூறப்படுகிறது.