வசீகரிக்கும் முக அழகுக்கு முந்திரி…! பளிச்சுனு கிடைக்கும் லுக்…!

June 4, 2022 at 2:19 pm
pc

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நாம் அறிந்தது தான், அகத்தின் அழகைக் காட்டும் கண்ணாடியாக இருப்பது முகம் ஆகும். புன்னகையுடன் இருக்கும் முகம் தன்னம்பிக்கையின் உருவமாக இருக்கும். புன்னகையான முகத்தின் மெருகூட்டும் காரணி பிரகாசமான முகப்பொலிவு ஆகும்.

அனைவரையும் கவரும் பளபளப்பான முகத்தைப் பெறுவது எப்படி என்பதை அறிய வேண்டுமா! அதற்கு இந்த செய்முறை உங்களுக்கு உதவிக்கரமாக இருக்கும்.

முகத்தைப் பொலிவாக்கும் முந்திரி!

ஏராளமான சத்துகளைத் தன்னுள் அடக்கிய முந்திரி, நம் சருமத்திற்கு அழகு கூட்டும் பொருளில் ஒன்றாகும். முந்திரியை வழக்கமான உணவில் சேர்த்து உண்ணுபது சருமத்துக்கு மட்டுமில்லாமல் நம் உடலுக்கும் மிகவும் நல்லதாகும், வயது முதிர்வை இந்த முந்திரி குறைக்கும் என்பது மருத்துவ ஆலோசகர் பலரின் கருத்தாகும்.

நம்மில் பலபேருக்கு தெரியாது முந்திரிப்பழம் சருமத்தைப் பிரகாசப்படுத்துவதில் முக்கிய பங்கு வகுக்கிறது என்பதாம். ஆனால், நம் சருமத்தின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மாசு, சுத்தமில்லாத வெளிப்புற சூழல் போன்றவற்றிலிருந்து நம் முகத்தை அழகுபடுத்துவதில் முந்திரிப்பழம் உதவும்.

முந்திரியை விட உலர்ந்த முந்திரிப்பழத்தில் சருமத்தைப் பிரகாசம் ஆக்கும் புரதச்சத்துகள் ஏராளமாக உள்ளது,

செய்முறை:

  • முதலில், தேவையான அளவு உலர்ந்த முந்திரிப்பழத்தை எடுத்து கொள்ளவும், அதில் 1 ஸ்பூண் காபி தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்.
  • நாம் அரைத்த அந்த கலவையில் 50 ml குளிர்ந்த பால் சேர்த்து கொள்ள வேண்டும்.
  • இப்போது கலவையை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் அந்த கலவை முகத்தில் சருமத்துடன் ஒன்றாக ஊற வேண்டும், பின் நீரால் முகத்தை கழுவி கொள்ளலாம்.

இவ்வாறு மாதம் இருமுறை செய்து வர நம் முகம் பொழிவு பெறும், உங்கள் முகம் எப்படி பளிச்சுனு மாறியது என்ற ரகசியத்தை உங்கள் நண்பர்கள் உங்களைக் கேட்பார்கள். என்ன..! பளிச்சுனு மாறும் சருமத்தைப் பெற முந்திரி அரைக்க கிளம்பியாச்சா..!

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website