வாகைப்பூவின் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரியுமா?
நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு வெற்றி மலர் என்றால் அது வாகை மலர் தான். இதை வெற்றியின் சின்னமாக பயன்படுத்தினார்கள். ஆனால் இதில் பல மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. வாகை மரத்தின் அனைத்து பாகங்களும் மூலிகை பயன் கொண்டது. இதில் பூவில் அதிக நன்மை காணப்படுகின்றது. இந்த பூ இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றது. இந்தியாவில் இரு பரவலாக காணப்படுகின்றது.
இதை தவிர இது மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலும் காணப்படும். இதில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இது கண் நோய்களை குணமாக்கிறது. கண்ணில் ஏற்படும் எரிச்சல் வறட்சி நீர் வடிதல் பார்வை குறைபாடு போன்றவற்றை இல்லாமல் செய்கிறது. இதற்கு நீங்கள் வாகை இலையில் செய்த தேனீர் பருகி வருதல் நன்மை தரும்.
இது உடலில் ஏற்படும் நச்சை நீக்க பயன்படுகிறது.பொதுவாக நமக்கு உஷ்னத்தால் வரும் கட்டிகளை இது குணப்படுத்துகிறது. அதன் பின்னர் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீங்க பயன்படுகிறது.
உடல் செல்களில் ஏற்படும் ்அிற்ட்சி பண்புகளை எதிர்த்து போராட உதவும். இதன் இலை நுரையீரல் சார்ந்த பிரச்சனை வராமல் பாதுகாக்கும்.ஆஸ்த்துமா தொந்தரவு மூச்சு தியரல் பிரச்சனை இருமல் போன்ற பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும்.
வாகை மரத்தின் நறுமணமிக்க மலர்களைக் கொண்டு, விஷக்கடிகளுக்கான மருந்தை தயாரிக்கலாம். சிறிதளவு வாகை மலர்கள் அல்லது மொட்டுக்கள் இவற்றுடன் சிறிது மிளகைப் பொடி செய்து, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சூடாக்கி, பாதி அளவு வந்ததும் ஆற வைத்து, தேனைக் கலந்துகொள்ள வேண்டும்.
இதனை தினமும் பருகிவர உடல் கை கால்களில் ஏற்படும் குத்துவலி போன்ற பிரச்சனைகள் எல்லாம் மாயமாகும், உடலில் சேர்ந்த விஷங்கள் முறிந்துவிடும், விஷக்கடிக்கு மருந்தாகவும் அமையும்.