விஜய் அரசியல் பேச்சு: இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டரில் விமர்சனம்!
நடிகர் விஜய்யின் முதல் அரசியல் பேச்சு எப்படி இருந்தது என்று தான் தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாடே பேசிக்கொண்டு இருக்கிறது. 2026 தேர்தலில் போட்டி, கூட்டணிக்கு வருபவர்கள் வரலாம் என விஜய் பேசியதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் விஜய் பேசியது பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.