விஜய் தேவரகொண்டா பெயரை வைத்து.’.. ‘பல பெண்களிடம் சித்து விளையாட்டு !
தென்னிந்தியாவை கலக்கிவரும் சூப்பர் ஹீரோ விஜய் தேவரகொண்டா தெலுங்கில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து பிறகு தமிழிலும் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்கள் நடிக்கத் தொடங்கி கல்லூரி பெண்களின் நெஞ்சில் குடி கொண்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவிற்கு ஆண்களை விட பெண் ரசிகர்களின் அதிகம் உள்ளது மேலும் இளம் பெண் ரசிகைகள் எண்ணிக்கை அதிகரித்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தெலுங்கானா நபர் ஒருவர், விஜய் தேவரகொண்டாவின் பெயரில் பொய்யான பேஸ்புக் அக்கவுண்டை தொடங்கி, பெண்களுடன் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்த தகவல் நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் தேவரகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படியில் போலீசார் சைபர் க்ரைம் அவரின் சுயவிவரத்தை கண்டு பிடித்து. பின்னர் போலீஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் ஒருவர், அந்த பொலி நபரிடம் போன் பேசி ஐதராபாத்துக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு காத்திருந்த கொண்டு இருந்த காவல் துறையினர் , விஜய் தேவரகொண்டாவின் உதவி ஆட்களும் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.