வித்யாசமான திணை இனிப்பு புட்டு செய்து எல்லாரையும் அசத்தலாம் வாங்க …!!

தேவையான பொருட்கள்
திணை மாவு – 1/2 கிலோ
சர்க்கரை – 150 கிராம்
தேங்காய் – 1
ஏலக்காய் – 1 சிட்டிகை
உப்பு – சிறிதளவு
செய்முறை
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். திணை மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசறி வைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் வைத்து வேக வைத்து வெந்தவுடன் ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். அதனுடன் சர்க்கரை, துருவிய தேங்காய், ஏலப்பொடி சேர்க்கவும்.