விபத்தில் இறந்தவருக்கு கொரோனா என்று பொய் சொல்லிய நண்பர்கள்…!
கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள புதிய புரத்தை சேர்ந்தவர் முகமது ஜாகீர் (வயது 30) இவருக்கும் ஷிபானா என்ற பெண்ணுக்கும் ஆறுமாதம் முன்பு தான் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஓமன் நாட்டிற்கு சென்று சென்றுவிட்டார்
கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி மாலை கால்பந்து விளையாட தன் நண்பர்களோடு மைதானத்துக்கு சென்று உள்ளார் அப்போது அவர் எதிர்பாராதவிதமாக விளையாடும்போது சுருண்டு விழுந்துள்ளார் முஹம்மது ஜாகீர் கீழே விழுந்ததைக் கண்ட நண்பர்கள் பதறியடித்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஜாஹிருக்கு கொரோனா வைரஸ் உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொய்யான தகவல் அனுப்பினார்
ஜாஹிர் மனைவி மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவரிடம் பொய் சொல்லி நீங்கள் இந்தியா செல்லுங்கள் என டிக்கெட் போட்டு வழியனுப்பி வைத்தனர். மனைவி சென்ற விமானத்திலேயே கணவரின் சடலத்தையும் எடுத்து வந்துள்ளனர் இந்த சம்பவம் அந்தப் பெண்ணுக்கு நீங்காத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது