விபரீத ஆசை போயும் போயும்… “அந்த இடத்திலா டாட்டூ குத்தலாமா??
ரோக்லாவ் நகரை சேர்ந்த அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற இனம் பெண், மாடலாகவும், ராப் இசை பாடகராக இருக்கிறார். ஃபைட்டரான போபெக்கின் ரசிகையாக இருக்கும் இவர் போபெக் தனது இரண்டு கண்களிலும் கருமை நிற டாட்டூவை போட்டுள்ளதைப்போலவே தானும் கண்ணில் டத்தோ போட ஆசைப்பட்டார். இந்நிலையில் அதேபோன்று தனக்கு கண்ணில் டாட்டூ போட வேண்டும் என எண்ணிய அந்த இளம் பெண் , ஒரு டாட்டூ போடும் நபரை அணுகியுள்ளார்.
கண்ணில் டாட்டூ போடும் அனுபவம் இல்லாத அந்த நபர், பணத்திற்காக அவர் தான் டாட்டூ போடுவதாக பொய் கூறி அலெக்சாண்ட்ராவிற்கு டாட்டூ போட்டுள்ளார். கண்ணில் கருமை நிறத்தை வைத்து டாட்டூ போட்டு முடித்தவுடன், இரண்டு கண்களும் அதிகமாகி எரிச்சலாக இருப்பதாகவும், வலிப்பதாகவும் அந்த பெண் சொல்லியுள்ளார்.ஆனால் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் சொன்ன அந்த நபர், வலி மருந்து கொடுத்து அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் தனது இடது கண் பார்வையை அந்த பெண் இழந்துள்ளார். உடனே டாக்டரிடம் அப்பெண் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர் கண்ணில் கருமை நிற டாட்டூ பரவியுள்ளது, அதனை சரி செய்ய முடியாது என தெரிவித்ததுடன், வலது பக்க கண்ணிலும் பார்வை போக வாய்புள்ளது என கூறியுள்ளார் டாக்டர் சொன்னதைப்போகவே வலது கண் பார்வையும் பறிபோயுள்ளது..