வீட்டுப்பாடம் எழுதாததால் அடித்து பல்லை உடைத்த ஆசிரியர்: மயங்கி விழுந்த மாணவன்
உத்திரபிரதேசம் – ரேபரேலி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவரின் வீட்டுப்பாடம் செய்துவராததால் மாணவரை தாக்கி பற்களை உடைத்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி பயிலும் குறித்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை காரணமாக அநேகமான வீட்டு பாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து மாணவர்களும் வீட்டு பாடங்களை செய்து வருவது கட்டாயமானது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் இனைவரும் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர். தொடர்ந்து அறிவியல் ஆசிரியர், வீட்டுப்பாடங்களை சரி திருத்துவதற்கு எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் வீட்டுப் பாடம் எழுத முடியவில்லை என்று மாணவர் தெரிவித்த நிலையில் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், மாணவரின் வாய் மற்றும் முகத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் மாணவரின் பல் உடைந்த நிலையில், தரையில் மயங்கி விழுந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், பாடசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக சக மாணவர்கள் பாடசாலை முதல்வரிடம் தெரிவிக்க மயக்கமடைந்த மாணவரை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்துடன் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு மாணவன் வீடு திரும்பியுள்ளதாகவும் அந்நாட்டு உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.