வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளர் ! துரத்தி துரத்தி வெட்ட முயன்ற நபர் ..பரபரப்பான சம்பவம்

காரைக்குடியில் வீடு காலி பண்ண கூறியதால் வீட்டின் உரிமையாளரை அரிவாளால் விரட்டி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கே.கே. நகரில் வசித்து வருபவர் சரவணன் (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவர் செல்லப்பன் நகரில் கட்டிய சொந்த வீட்டை இரண்டு வருடங்களுக்கு முன்பு செல்வகுமாருக்கு (வயது 39) என்பவருக்கு ஒத்திக்கு விட்டுள்ளார்.
ஒத்தி முடிந்து விட்டதால் சரவணன் வீட்டை காலி செய்ய கூறியுள்ளார். செல்வகுமார் வீட்டை காலி செய்ய மறுத்துள்ளதாக கூறப்படுகிறது
மீண்டும் சரவணன் செல்வ குமாரிடம் வீட்டை காலி செய்து தருமாறு கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் தனது அத்தை லாதாவுடன் இருசக்கர வாகனத்தில் கே.கே நகரில் இருக்கும் சரவணன் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர்.