வீட்டை சூதாட்ட கிளப் போல் மாற்றிய பிரபல நடிகர்., சிக்கிய 13 நபர்கள் யார் யார் ?

தமிழ் திரையுலகில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் நடிகர் ஷாம். சமீபகாலமாக திரையுலகில் வாய்ப்பு கிடைக்காததால் சிறிய கதாபாத்திரத்தில் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.
நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டை சீட்டாட்டம் போல் மாற்றி காசை வைத்து சூதாட்டம் ஆடி போலீசிடம் சிக்கியுள்ளது திரைத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் நடிகர் ஷாம்க்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் ஆட்களை சேர்த்துக்கொண்டு சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலறிந்த போலீசார் நேற்றிரவு ஷ்யாமின் அடுக்குமாடி குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென நுழைந்து சோதனை செய்த போது, நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யபட்டன.
தொடர்ந்து பல நாட்களாக அடிக்கடி இங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் பலர் இது போன்று சட்டவிரோதமாக சீட்டு விளையாட்டின் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை நடிகர் ஷாம் சூதாட்ட கிளப் போல் நடத்திவந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதில் சிக்கிய 13 பேர் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
இந்த சூதாட்டத்தில் பல முக்கிய பிரபலங்கள் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.