வெற்றி பாதையில் இந்தியாவின் சந்திரயான் 3: நிலவில் கால்பதித்த பிரக்யான் ரோவர்

August 24, 2023 at 7:21 am
pc

சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி உள்ளது.

சாதனை படைத்த சந்திரயான் 3

  இந்தியாவின் சந்திரயான் 3விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியில் இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் நாடாக இந்தியா தனது சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

நிலவில் தடம் பதித்த பிரக்யான் ரோவர்

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய பிறகு, நிலவின் மேற்பரப்பில் எழுந்த தூசி துகள்கள் அடங்கிய பிறகே விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தரையிறங்கி கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு பிறகு தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமான நிலவின் மேற்பரப்பில் இறங்கியுள்ளது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website